உரிய தேதியில் ஊதியத்தை பெறுவதற்கு BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது. அதன் காரணமாகவே, மார்ச் மாத ஊதியம், அனைவருக்கும், ஏப்ரல் 7ஆம் தேதி கிடைத்தது. தற்போது, ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் பெறுவதற்காக, BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியதுடன், நேரடியாகவும் விவாதித்திருந்தது.

மேலும் இது தொடர்பாக 22.04.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், DIRECTOR(HR) திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களிடம் விவாதித்தார். அப்போது, இந்த முறை ஏப்ரல் மாத ஊதியம் உரிய தேதியில் வழங்கப்பட்டால், கால தாமதமாகவே ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டுக் கொண்டிருக்கும், அந்த சங்கிலித்தொடர் அறுபட்டு விடும் என்பதை, நமது பொதுச்செயலர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு சாதகமாக பரிசீலிக்கப்படும் என DIRECTOR(HR) உறுதி அளித்துள்ளார்.