நாடுமுழுவதும் கொரோனா பெருந்தொற்று கடுமையாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால், BSNL ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் கூட பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. எனவே, BSNL ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனினும், தனியார் மருத்துவமனைகளில் பெருந்தொகைகளை முன்பணமாக கட்ட வேண்டி உள்ளது. எனவே, BSNL ஊழியர்களுக்கு, அவசர மருத்துவ தேவைகளுக்காக முன்பணம் வழங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்க, அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது.