கொரோனா பெருந்தொற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு, மருத்துவ முன்பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெள்யிட்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள, தனிமை படுத்தப்பட்ட படுக்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், வெண்டிலேட்டர் இல்லாத ICUவில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்ச ரூபாய்களும், வெண்டிலேட்டருடன் கூடிய ICU எனில் 3 லட்ச ரூபாய்களும் முன்பணம் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. X,Y மற்றும் Z கேட்டகிரி நகரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டவர்களுக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், முறையே 90%, 80% மற்றும் 75% அளவிற்கு முன்பணம் வழங்கப்படும். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவசர மருத்துவ முன்பணம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு, BSNL ஊழியர் சங்கம், 28.04.2021 அன்று DIRECTOR(HR) அவர்களுக்கு கடிதம் கொடுத்தது. மத்திய சங்கத்திற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.