“தொழிலாளரின் நலன் காக்கவே
உயிர் நீத்த தியாகச் செம்மல்களே”

மேற்கண்ட பாடல்வரிகளை, தோழர் பொன்னையா அவர்கள் தனது கம்பீரக் குரலால் பாடக் கேட்ட ஒவ்வொரு முறையும், என் கண்கள் என்னையும் மீறி குளமாகியதுண்டு. ஒரு அற்புதமான மெட்டுடன், மனதை நெகிழ வைக்கும் வார்த்தைகளைக் கோர்த்து அந்த பாடலை உருவாக்கியிருந்தார் தோழர் பொன்னையா.

செங்கொடி இயக்கத்தின் வீரப்புதல்வர்களின் தியாகங்களை, இன்றைய தலைமுறையினருக்கு விளக்கும் அற்புதமான பாடல். தோழர் பொன்னையா, தனது கம்பீரக் குரலால் பாடும் போது, கேட்பவர்களின் ஊனுடன் உயிரும் உருகிவிடும்.

சுமார் இரண்டு / மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோழர் பொன்னையாவுடன் தொலைபேசியில் பேசிய பொழுது சொன்னேன்.”தோழரே, உங்களது குரலில் அந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும்” என்று. அப்போது எனக்குத் தெரியாது, அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலே போகும் என்று.

எந்தவிதமான எதிப்பார்ப்புமின்றி தொழிலாளி வர்க்க இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் பொன்னையா. அவரது மறைவுச் செய்தி ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. தோழர் பொன்னையா அவர்களுக்கு எனது இதய அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
– P. அபிமன்யு,
பொதுச் செயலர்,
BSNLEU.