ஆந்திரா, பீகார்,மகராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம்  ஆகிய மாநிலங்களில் நக்சல் பாதிப்பு பகுதிகளில்  தொலை தொடர்பு சேவைக்காக  2199 மின்னணு கோபுரங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இரண்டு வருடங்களுக்கும் மேலாக இத்திட்டம் கிடப்பில் போடப் பட்டிருந்தது.  சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டு கொல்லப் பட்டுள்ளதால் மத்திய அரசு இத்திட்டத்துக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

3046 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்திற்கு சர்வதேச சேவை நிதியிலிருந்து பணம் வழங்கப் படும்.  இப்பணிக்கு டெண்டர் கிடையாது.  தனியார் நிறுவனங்கள் இதிலுள்ள ஆபத்து கருதி இப்பணியை மேற்கொள்ள முன்வரவில்லை.

தேசத்துக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள பொதுத் துறை நிறுவனமான   BSNL-  தான் இப்பணியை மேற்கொள்ளவிருக்கிறது.  நெருக்கடி காலங்களில் தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு BSNL- ஐத்தான் நம்ப முடியும் என்பதை மத்திய அரசு   புரிந்து கொள்ள வேண்டும்.