கோவை வெற்றி விழா நிகழ்ச்சிகள்
நடந்து முடிந்த ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அகில இந்திய அளவில் BSNL ஊழியர் சங்கம் வெற்றி பெற்றதை ஒட்டி, தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில், கோவை மாநகரில், பிரதான தொலைபேசியகத்தில் பிரம்மாண்டமான முறையில், 4.6.2013 அன்று வெற்றி விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
குமரி முதல் சென்னை வரை, ஆயிரம் பேருக்கு மேல் அணி திரண்ட இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர். மாரிமுத்து தலைமை வகிக்க, CITU மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர். R.கருமலையான், நமது அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர். P.அபிமன்யூ, மாநிலச் செயலாளர் தோழர். S.செல்லப்பா, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர். M.முருகையா, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் தோழியர். P.இந்திரா மற்றும் கூட்டணி சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில், நமது மாவட்டச் சங்கத்தின் இணையதளமான பாசறை- www.bsnleungc.com – அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். அபிமன்யூவால் கூட்டத்தினரின் கரவொலிக்கிடையில் துவக்கி வைக்கப் பட்டது.
கோவைக்கு நமது மாவட்டத் தலைவர் தோழர். கணபதியாபிள்ளை, மாவட்டச் செயலர் தோழர். ஜார்ஜ் தலைமையில் 3 தோழியர் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
– BSNLEU NGC.