என்.எல்.சி. பங்குகள் விற்பனை மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

 Theekkathir logo.gif

சென்னை, ஜூன் 23 –

பிரதமர் மன்மோகன் சிங் குக்கு முதலமைச்சர் ஜெயல லிதா ஒரு கடிதம் எழுதியுள் ளார். அதில் அவர் கூறி இருப்ப தாவது:-நெய்வேலி பழுப்பு நிலக் கரி நிறுவனத்தில் உள்ள தனது 5 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது தொடர் பாக நான் மீண்டும் உங்க ளுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன்.

நெய்வேலி பழுப்பு நிலக் கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டாம் என்று கடந்த 8-ந்தேதி உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன். என்றாலும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு எடுத்து இருப்பது ஏமாற் றத்தையும், அதிருப்தியையும் தருகிறது.தமிழ்நாட்டு மக்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்வதையே இது மீண்டும் உதாரணமாக காட்டு கிறது. நெய்வேலி பழுப்பு நிலக் கரி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு வேறு 2 மாற்று வழியில் அமைதியான தீர்வு காணலாம் என்று நான் கூறி இருந்தேன்.என்.எல்.சி. பங்குகளை விற்றால் அது எதிர்மறை விளை வுகளை ஏற்படுத்தி விடும் என்றும் நான் உங்களுக்கு 23-5-2013 அன்று எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தேன். நான் தெரிவித்திருந்த 2 மாற்று வழிகள் பற்றி கொஞ்சம்கூட ஆராயாமல் மத்திய அரசு புறக்கணித்து தள்ளுபடி செய்து விட்டது எனக்கு மிகுந்த ஏமாற் றத்தை தந்துள்ளது.இதுதொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்தில், என்.எல். சி.யில் உள்ள பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியம் தருகிறது. என்.எல். சி.யில் உள்ள தனது 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது.

தமிழக மக்களின் விருப்பத் திற்கு எதிராக இந்த முடிவு உள்ளது. பங்கு சந்தைகளில் சமீபகாலமாக சரிவு ஏற்பட் டுள்ள நிலையில், என்.எல்.சி. பங்குகளை விற்க உங்க ளுக்கு ஆலோசனை தெரிவிக் கப்பட்டது என்பது எனக்கு வியப்பாக உள்ளது.லாபம் தரும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. பங்குகளின் உண் மையான மதிப்பு மத்திய அரசுக்கு தெரியாதா, தங் கத்தை விற்க தொடங்கி இருப் பதால் மத்திய அரசின் எதிர் காலம் எப்படி இருக்கும் என் பதை தீர்மானிக்க முடியாது. எந்த ஆலோசனையும் நடத்தா மலே மத்திய அரசு அவசரமாக இந்த முடிவை எடுத்துள்ளது.பங்குகளை விற்பது தொடர்பாக தொழிற்சங்கத் துடனும், தொழிலாளர் அமைப்பு களுடன் கலந்து பேசிவிட்ட தாக நீங்கள் எனக்கு எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் மத்திய அரசின் விரும்பத்தகாத இந்த நடவடிக்கையால் தொழிலா ளர்கள் போராடப் போவதாக கூறியுள்ளனர். தவிர்க்கப்பட வேண்டிய இந்த போராட்டத்தை தமிழகம்தான் எதிர்கொள்ள வேண்டும்.

இது மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச் சனையை மேலும் அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.செபியின் விதிகள், வழி காட்டிகளை மட்டுமே கொண்டு மத்திய அரசு வெறுமனே என்.எல்.சி. பங்குகளை விற் கும் முடிவை எடுத்து இருக்கக் கூடாது. எனவே என்.எல்.சி.யில் உள்ள 5 விழுக்காடு பங்கு களை விற்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.நான் ஏற்கனவே முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரத்தில் 2 மாற்று வழிகளை கவனத்தில் கொள் வீர்கள் என்று நம்புகிறேன். எனவே என்.எல்.சி. விவகாரத் தில் மத்திய அரசு உடனே தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தான் தமிழக மக்களின் விருப் பங்களை பூர்த்தி செய்ய முடியும்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.