தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு உதயம் புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து செப். 20ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து செப். 20 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்ட மைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஏ.சுந்தரம் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:அகில இந்திய அளவில் ஐஎன்டியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், சிஐடியு, ஏஐடி யுசி உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தொழில்களை சீரழிக்கும் மத்திய –மாநில அரசுகளின் நவீன தாராள மய கொள்கைகளை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றன. குறிப் பாக புதிய பென்சன் திட் டம் என்ற பெயரில் பென் சன் பறிப்பு மோசடியை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக் கள், மறியல்கள், கோரிக்கை மாநாடுகள், நாடாளு மன்றம் நோக்கி பேரணிகள் என எண்ணற்ற போராட் டங்கள் நடத்தப்பட்டுள் ளன. 2012 பிப்ரவரி 28-ல் ஒருநாள் வேலை நிறுத்த மும், 2013 பிப்ரவரி 20 மற் றும் 21 இரண்டு நாள் வேலை நிறுத்தமும் நடத்தப்பட் டன. தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காணுவதாக உறுதிகூறிய பிரதமர் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் பாராமுகமாக இருப்ப தோடு சமூக பாதுகாப்பாக உள்ள பழைய பென்சன் திட்டத்தை மாற்றி ஒய்வூதி யப் பறிப்புக்கு இரவும் பக லும் அவரது அரசு செயல் பட்டுவருகிறது. இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் தோழ மைக்கட்சிகளும் அரசின் இந்தச் செயலுக்கு ஆதர வாக இருக்கின்றன.காலம் காலமாக போராடி, தொழிலாளர்கள் வென் றெடுத்த உரிமைகள் பறி போகும் பின்னணியில், ஓய்வூதியத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு, பள்ளி- கல் லூரி ஆசிரியர் பாதுகாப்பு, ரயில்வே, தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடு, தபால் மற் றும் ரயில் தபால் சேவை, வரு மான வரி கணக்கு மற்றும் தணிக்கை, சிவில் அக் கவுண்ட்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், மின்வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஆகிய துறைகளின் ஓய்வூதியர் சங் கங்களின் பிரதிநிதிகள் 4.9. 2013 அன்று சென்னை வரு மானவரி அலுவலகத்தில் ஒன்றுகூடி தொடர்ச்சி யான ஒன்றுபட்ட போராட் டத்தை நடத்தவேண்டிய அவசியத்தைப்பற்றி விவா தித்தனர்.

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக ஒரு அமைப்பு குழுவை உருவாக்கவும், பொதுவான கோரிக்கை பட்டியல் ஒன்றை உருவாக்கி போராடவும், கோரிக்கை மாநாடு நடத்தவும் ஒருமன தாக முடிவு செய்யப்பட் டது. புதிய பென்சன் திட் டத்தை கைவிடக்கோரி தீர் மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மத்திய பென்சன்துறை அமைச்சரின் தலைமையி லான ஓய்வூதியர் பிரச்சனை களை, ஓய்வூதியர் சங்கங் களுடன் பேசி தீர்வுகாணும் நிலைக்குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கும் செப் டம்பர் 20ஆம் தேதி புதிய பென் சன் திட்டத்தை கைவிடக் கோரி சென்னை மூர்மார் கெட் ரயில்வே வளாகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரையில் தர்ணா போராட் டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள் ளது. அனைத்து ஓய்வூதிய சங்கங்களும் தங்களது உறுப்பினர்களை பெரும் எண்ணிக்கையில் திரட்டி போராட்டத்தை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

 தீக்கதிர்