மருந்து ஆராய்ச்சி அந்நியரை அணுகும் இந்தியக் கம்பெனிகள்

மும்பை, ஆக. 29-அதிக லாபம் கிடைக்கும் என்பதால் மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடத்த முடிவு செய்துள்ளதாக இந்திய தனியார் மருந்துக் கம்பெனியின் வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக மும்பை யில் வெள்ளியன்று மருந்துக் கம்பெனிகளான பரமால் எண்டர்பிரைசஸ் லிமிடெட், சன் பார்மச்சுட்டிக்கல்ஸ் மற் றும் லூப்பின் லிமிடெட் ஆகியவற்றின் அதிகாரிகள் பத்திரிகை யாளர்களிடம் பேசினர். அவர் கள் கூறியதாவது:-
இந்தியாவில் மருந்துகளை ஆய்வுக்கூடங்களில் பரிசோ தனை நடத்துவதற்கு முறை யான ஒழுங்குமுறைகள் இல்லை. இவ்விசயத்தில் உச்சநீதி மன்றம் இரு ஆண்டுகளுக்கு முன்னதாக 162 பரிசோதனைக் கூட ஆய்வுகளை நிறுத் தியதற்கு பின்னர் நிலைமை மோச மாகியுள்ளது. இந்தியாவில் மருந்துகளின் பரிசோதனைக் கூடங்களின் ஆய்வுகளுக்கு ஒப்புதல் பெற ஒரு ஆண்டு காலம் ஆகிறது. அமெரிக்காவிலோ 28 நாட்கள்தான் ஆகின்றது.
இந்தியாவில் மலிவான பொதுமருந்துகளை தயாரிக்க கவனம்செலுத்தப்படுகிறது. ஆனால் வெளி நாடுகளிலோ கருத்தடை மாத்திரைகளிலும், ஆஸ்துமா போன்ற சுவாசமண்டல நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலர் மற்றும் ஊசி போட பயன்படுத்தும் கருவிகளின் உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்தி லாபம் ஈட்டுகின்றனர். அதேபோல நாங்களும் மருத்துவத் துறையில் அனுபவமுள்ள சில நிபுணர் களை அமர்த்தி வெளிநாடுகளில் ஆராய்ச்சிகள் நடத்தி மருந்து களை உற்பத்தி செய்ய உள் ளோம்.இவ்வாறு மருந்துக் கம் பெனியின் அதிகாரிகள் கூறியுள் ளனர்.
ஆனால் மேற்கத்திய நாடுகளில் மாலிக்கூல்ஸ் என்ற மூலக் கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடத்த இந்தியாவிலுள்ளதை விட 10 மடங்கு செலவாகும். மருந்துக் கம்பெனிகள் மத்தி யில் இது இந்தியப் பயன் என்றழைக்கப்படுகிறது. அதிக லாபத்தை பெறுவதற்காக இதை இழக்கவும் மருந்துக் கம் பெனிகள் தயாராகிவிட்டன என்று தெரிகிறது.