BSNL ஊழியர் சங்கம்

தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

நாகர்கோவில். 629 001

            நமது மாவட்டத்தில் 01-11-2014 முதல்  House keeping and General Service  க்கான  பணியை Malli Security Services  என்ற சென்னை நிறுவனம். டெண்டர் எடுத்துள்ளதுசுமார் 150 ஒப்பந்த ஊழியர்கள் இந்த நிறுவனம் மூலமாக BSNL  ல் பணி செய்து வருகின்றனர்.

           ஒப்பந்த ஊழியர்கள் செய்ய வேண்டிய பணி, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த  சம்பளம், பிரதி மாதம் 7 ந் தேதி சம்பளம் சம்பளம் பட்டுவாடா  போன்ற முக்கியமான விஷயங்கள் மீது  BSNL    நிறுவனமும் ( முதன்மை பணியமர்த்துவோர்  PRINCIPAL EMPLOYER )  மல்லி நிறுவனமும்  (ஒப்பந்தகாரர்) ஒப்பந்தம் செய்து கொண்டன. நமது நீண்ட நாள் கோரிக்கையான போனஸ் வழங்கப்படும் என்பதும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்ப பட்டுள்ளது.   

          ஆனால் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கேற்ப மல்லி நிறுவனம் நவம்பர் மாதச் சம்பளத்தை டிசம்பர் 7 ந் தேதிக்குள் வழங்கவில்லை. மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக  மாலை நேர தர்ணா போராட்டங்களுக்குப் பின்னர்  24-12-2014 அன்று  நவம்பர் மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.

          நவம்பர் மாதச் சம்பளத்தைப் போன்று  டிசம்பர் மாதச் சம்பளமும் ஜனவரி மாதம் 7ந் தேதிக்குள் வழங்கப்படவில்லை. வெறும் 4 000 ரூபாய் மட்டும் முன் பணமாக வழங்கி விட்டு மீதச் சம்பளம் இதுவரை வழங்க வில்லை.உடனடியாக சம்பளம் கேட்டு  இரண்டு சங்கங்களும் இணைந்து 22-01-2015 அன்று  கருப்புத் துணியால் கண்களைக் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தின

           முதன்மை பணியமர்த்துவோர் (Principal Employer)     என்ற அடிப்படையில் BSNL  மாவட்ட  நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிய மல்லி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது.  எனவே Contract labour Regulation and Abolision Act 1970 Section 21 (4) ன் படி BSNL நிறுவனம் ( முதன்மை பணியமர்த்துவோர்    நிறுவனம் ) சம்பளம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

                 இந்த நிலைமையை விளக்கி Labour Enforcement Officer    தூத்துக்குடி அவர்களுக்கு அனைத்து ஊழியர்கள் கையெழுத்திட்ட புகார் மனுவை அனுப்பி உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக  LEO TT உறுதி அளித்துள்ளார்.

              இதுவரை சம்பளம்  வழங்கப்படாததால் , உடனடி சம்பளம் கெட்டு   04-02-2015 ( புதன் கிழமை)  காலை 9.30 மணி க்கு நாகர்கோவில் தொலைபேசி நிலையம் ,தகதொலைபேசி நிலையம்,மார்த்தாண்டம்தொலைபேசி நிலையம்முன்பு இரு சங்கங்களும் இணைந்த ஆர்ப்பாட்டம்   நடைபெறும்.  கலந்து கொள்வீர் ! நமது அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம் !

BSNLEU  & TNTCWU மாவட்டச் சங்கங்கள்