ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்தம்

 

எல்லோரும் எம்மவர்களே  !

       ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாராளுமன்றமும் கூட்டத்தொடரில் இருந்தது. மக்களவையில் 543 உறுப்பினர்களும் மாநிலங்கவையில் 245 உறுப்பினர்களும் உள்ள பாராளுமன்ற அவையில் கீழ்க்கண்ட  உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினையில்   கிளப்பினார்கள்.

  1. சன்கர் பிரசாத் தத்தா
  2. ஜிதேந்திரா சௌத்ரி
  3. சம்பத்
  4. கருணாகரன்
  5. பிஜூ

இவர்கள் அனைவரும் நமது கோரிக்கைகளை ஆதரித்து பேசினார்கள். வேலை நிறுத்தத்தை எடுத்துக் கூறினார்கள்.  தோழர் சங்கர் பிரசாத் தத்தா  அவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நமது நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கடிதமும் எழுதியுள்ளார்.  இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இட்து சாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட்த்தக்கது. அவர்களுக்கு நமது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்.