நடப்பாண்டில் ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் போது 60% தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில் இது குறித்து மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா கூறும்போது, “தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு பின் திரும்பப்பெறும்போது வரி வசூலிக்கப்படமாட்டாது.

தொழிலாலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60% பங்களிப்புக்கான வட்டித் தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதுவும் இத்திட்டம் ஏப்ரல் 1, 2016-ல் தான் அமலாகும்

மேலும் குறைந்த அளவு மாத சம்பளம், அதாவது மாதம் ரூ.15 ஆயிரம் வரை பெறும் ஊழியர்களுக்கு இபிஎஃப் வரி விதிப்பு முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார்..