தற்போதுதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்.5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக உயர்த்தி யுள்ளது.

இந்த நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் 1,500 கோடிரூபாயை முதலீடு செய்துள்ளது. தற்போது மீதமுள்ள 6 மாதங்களில் ரூ.11,500 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

தொழிலாளர் நல அமைச்சகம் இபிஎப்ஓ அமைப்பின் அறங் காவலர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து இருமுறை அறங்காவலர் குழு கூட்டத்தில் பேசிவிட்டோம். சில உறுப்பினர்கள் பங்குச்சந்தையில்முதலீடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அறங்காவலர் குழுவின் ஒப்புதல் தேவையில்லையா? என்று கேட்டதற்கு, மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஷங்கர் அகர்வால் இறுமாப்புடன்தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்துறை எடுத்துள்ள இந்த முடிவை தொழிற் சங்கங்கள் கடுமையாக கண்டித்துள்ளன. அறங்காவலர் குழு ஒப்புதல் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவை தொழிலாளர் நல அமைச்சகம் எடுத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.