வர்த்தக ரீதியாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவக்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இந்திய தபால் நிறுவனம் பெற்றது. பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்தி ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவக்குவதற்கான உரிமத்தை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.

பேமெண்ட்ஸ் வங்கி:

பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்குகளில் தனிநபர்கள் அல்லது சிறு நிறுவனங்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் பணத்தை வைக்க இயலும். இந்தப் புது வங்கி சேவையின் மூலம் மொபைல் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி போன்ற நிறுவனங்களை வங்கி சேவை அளிக்க முடியும். ஆனால் இந்த வங்கி சேவையின் மூலம் கடன் ஏதும் பெற முடியாது. வங்கி கணக்கில் பணத்தை வைத்தல், இணையதள வங்கி போன்ற சேவைகளின் மூலம் பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புவது பெறுவது போன்றவற்றைச் செய்யலாம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக ஏ பி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஆதார் திட்டத்தை நிறுவுவதில் குழு உறுப்பினராகவும், பங்கு விற்பனைத் துறையில் இணை இயக்குனர்காவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற நிறுவனங்கள்

ஆதித்யா பில்ரா நூவோ, ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வோடபோன் எம்-பேசா நிறுவனங்களும் விரைவில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிக்கும் பணியில் இறங்கி உள்ளத் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு;

      பலதனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கான  முன்முயற்சிதான், இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது.

BSNL Employees Union Nagercoil