நிதி அறிக்கை 2017

இந்த பட்ஜெட் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை

5 சதவீத தளர்வு

பட்ஜெட் 2017 நிதி அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையோருக்கான வருமான விரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது

நிதி தேவை

2017-18 வளர்ச்சி திட்டங்களுக்கு மிகப்பெரிய நிதி தேவையில் மத்திய அரசு தற்போது உள்ளது. இதனை எப்படித் தீர்க்கப்போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.

பங்குகள் விற்பனை

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவையைப் பூர்த்திச் செய்யக் கடந்த நிதியாண்டில் நிலுவையில் இருக்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விரைவாகப் பொதுச் சந்தை வர்த்தகத்திற்கு விட முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வருகின்ற நிதியை நேரடியாக வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

இது மட்டும் அல்லாமல் அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களை 2017-18ஆம் நிதியாண்டியில் பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் மிகப்பெரிய தொகை மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிதேவையைப் பூர்த்திச் செய்வதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்

வரி வசூல்

இவை அனைத்திற்கும் மேலாக வருமான வரி வசூல் அளவுகளை அதிகளவில் உயர்த்தியுள்ள காரணத்தால் இதன் மூலமாகவும் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

கல்வி நிதி கடும் வீழ்ச்சி

சமூகநலத்துறைகளுக்கான செலவினங்களில் மிகச்சிறிய அளவிற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பணவீக்கத்துடன் இதனைஒப்பிட்டுப் பார்த்தோமானால், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளால் ஏற்பட்டுள்ள ஊதிய செலவினத்தை எதிர்கொள்ளக்கூட இது போதாது. சுகாதாரத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவு கூடுதலாகி இருந்த போதிலும், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. (2016-17இல் திருத்திய மதிப்பீட்டில் 2.2 சதவீதமாக இருந்தது, 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டில் 2.16 சதவீதம்.) நிதி அமைச்சர் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று திரும்பத்திரும்ப கூறினார். ஆனால், விவசாயத் துறைக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையில் அது பிரதிபலித்திடவில்லை. விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு 1,98 சதவீதத்திலிருந்து, 1.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அரசாங்கத்தின் தம்பட்டம் அடித்திடும் திட்டங்களுக்குக்கூட எவ்விதமான ஒதுக்கீடும் கிடையாது.

* பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

* பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

* கச்சா எண்ணெய் நிலையில் நிலையற்ற தன்மை சவாலாக உள்ளது

* 2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு.

* கரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு

* ஊரக மற்றும் வேளாண் துறைக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு

* நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி

* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி

* 2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின் வசதி

* 2019 க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி

* 2017- 18ல் 5 லட்சம் குளங்கள் கட்டப்படும்

* பள்ளிகளில் அறிவியல் கல்வி மேம்படுத்தப்படும்.

* வரும் ஆண்டின் ஆன்லைன் மூலம் 350 படிப்புக்கள்

* மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள்

* கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு தன்னாட்சி

* 1.5 லட்சம் சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்

* 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு

* பெண்கள், குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி

* தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.52,393 கோடி

* சங்கல்ப் திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி

* மூத்த குடி மக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்

* சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும்.

* வங்கிகளின் மூலதன மறுசீரமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி

* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

* இந்த வருடத்திற்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21.47 லட்சம் கோடியாக இருக்கும்

* இந்த வருடத்தில் நிதி பற்றாக்குறை,மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.

* ஒட்டுமொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு

* பாதுகாப்பு துறைக்கு பென்சன் செலவு தவிர்த்து 2.74 லட்சம் கோடி ரூபாய்ஒதுக்கீடு

* அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும்.