தமிழகத்தில்கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுள்ளனர் . மாநிலம் முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கால்நடைகளுக்குக் கூட தீவனம் கிடைக்கவில்லை. கல்வி, சுகாதாரம் போன்றவை ஆட்சியாளர்களால் பணமயமாக்கப்பட்டு விட்டது. வேலையின்மை கடுமையாக உள்ளது. பண மதிப்பு நீக்கத்தால், பாதிக்கப்படாத துறைகளே இல்லை. இந்தப் பின்னணியில் மக்களின் பிரச்சனைகள் திசை திருப்பப்பட்டு, அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்துள்ளது.

வெல்லப்போவது யார் என்பது தெரியவில்லை. அதிகாரப் போட்டியில் வெல்வது யாராக இருந்தாலும் மக்கள் தோற்றுவிடக்கூடாது.