ஏர்செல் நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல், ஆனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் இணைவதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில், இணைப்பிற்கு முன்னரே சுமார் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர்செல்

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பகுதிகளில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமான இடத்தையும் வர்த்தகத்தையும் பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது.

8000 ஊழியர்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் சேவை அளித்தும் வரும் ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆர்காம் உடனான இணைப்பு உறுதியான நிலையில், இரு நிறுவனங்களும் இணைப்பிற்கான பணிகளைச் செய்து வருவதன் வாயிலாக முதல் கட்டமாக மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத பணியாளர்களை முழுமையாக நிறுவனத்தை விட்டு நீக்க ஏர்செல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

7-8 மாதங்கள்

மேலும் ஏர்செல் நிறுவனத்தில் அடுத்த 7-8 மாதத்தில் விற்பனை மற்றும் விநியோகம் பரிவு மட்டும் அல்லாமல் பிற அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்பார்க்கலாம். அடுத்தப் பணிநீக்க பணிகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் எனவும் ஏர்செல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடரும்..

இதில் உண்மை என்னவென்றால் இத்தகைய பணிநீக்கம் ஏர்செல் நிறுவனத்தில் மட்டும் அல்லாது, வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் நடக்கும் என்பதே. இந்திய சந்தையில் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் டெலிகாம் துறையில் 25,000 ஊழியர்களின் பணிநீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியை அதிகளவில் பாதிக்கும்.

3 காரணிகள்

மேலும் இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னைகளுக்கு 3 காரணிகளை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

1. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் (முகேஷ் அம்பானி)

2. டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு

3. பணமதிப்பிழப்பு

ஆனால் வேடிக்கை என்னவென்றால் இதே முன்று காரணிகளால் இத்துறை அடுத்தச் சில வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறது என்பது தான்
***************************************************************************    

 BSNL                                                                                                                                                                                                                                                                                                                                          

 மேலே சொல்லப் பட்ட காரணிகள் மற்றும் அரசின்

கார்பரேட்  ஆதரவு கொள்கைகள்,இவைகளால் பெரிதும்

பாதிக்கப்பட்ட  நமது BSNL நிறுவனம், இக்காலத்தில்  

லாபமீட்டும் நிறுவனமாக    வளர்ந்துள்ளது .

எந்த ஒரு ஊழியருக்கும் எந்தபாதிப்புமில்லாமலும்    

 BSNL க்கும் எந்த பாதிப்பில்லாமலும்  

BSNLஊழியர் சங்கம் பாதுகாத்து வருகிறது.