22.2.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக, BSNL ஊழியர் சங்கமும், BSNL கேஷுவல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பேரணி –
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000
சம வேலைக்கு சம சம்பளம்
பணி நிரந்தரத்துக்கான திட்டம்
ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ., கிராஜுவிட்டி, போனஸ்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 250 பேரும், நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து 16 பேரும் கலந்து கொண்டுள்ளனர். மாவட்டச் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !