கடைசில எங்களையும் வாங்க வைச்சிட்டாங்க.. புலம்பித் தள்ளும் ‘ஏர்டெல்
முக்கியமானது ஐடியா-வோடபோன் இணைப்பு, ஆர்காம்-ஏர்செல் இணைப்புகள் தான். ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் போட்டியை சமாளிக்க நிறுவன இணைப்புகளிலும், நிறுவன கைப்பற்றும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2016ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்தித்த நிலையில், சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும், நாமும் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நார்வே நாட்டு டெலிகாம் நிறுவனமான டெலிநார்-இன் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது ஏர்டெல்.
இந்திய டெலிகாம் சந்தையில் போட்டிகள் அதிகரித்துள்ள காரணத்தால் டெலிகாம் நிறுவனங்கள் நிறுவன இணைப்பு மற்றும் கைப்பற்றும் படலத்தில் இறங்கியுள்ள நிலையில், இத்துறை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் வேலைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது.
டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள போட்டியால் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று இணைத்து தன்னை வலுப்படுத்திக் கொண்டு
போட்டியிடுகிறது.
இந்நிறுவனங்களில் பணிபணிபுரிந்த பல ஆயிரகணக்கான ஊழயர்களை வீட்டுக்கு அனுப்பியும் உள்ளது. 25,000 பேர் பணிநீக்கம் 25,000 ஊழியர்களுக்கு ‘பிங்க் சிலிப்’.. அதிர்ச்சியில் டெலிகாம் துறை..! ஏர்செல் நிறுவனத்தில் 700 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி
BSNL
BSNL துறை,எந்த நிறுவனங்களையும் வாங்குவதற்கு அரசு அனுமதிப்பதில்லை,
BSNL நிறுவனத்தை வலுப்படுத்த அரசு நிதியளிப்பதும் இல்லை.
மாறாக BSNL ல் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின்
அறைகூவலை ஏற்று இரவு பகல் என்று பாராமல் மக்களை சந்தித்து,
BSNL ன் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.
தனியார் கம்பெனிகளின்ஒட்டு மொத்த இலக்கு BSNL தான் .
இந்த மாபெரும் போட்டியில்BSNL ஊழியர்கள் அதிகாரிகள் ஒன்றிணைந்து
மக்கள் ஆதரவோடு எந்த ஊழயர்களையும் இழக்காமல்
மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளோடு
BSNL ஐ வெற்றிபெற செய்வோம்.