வங்கிகளில்-2016ம் ஆண்டு நடந்த மோசடிகள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ. இதில் பல மோசடிகள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைதான் நடந்துள்ளது என்று ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றது. இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த மோசடி பட்டியலில் இரண்டால் இடத்தில் உள்ளது என்பது தான்.

ஐசிஐசிஐ

நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 455 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சற்று குறைவாக 429 மோசடி வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்று மற்றும் நான்காம் இடம்

அடுத்த இடங்களான மூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஸ்டாண்டர்டு சாட்டர்டு 244, எச்டிபசி வங்கியில் 237 வழக்குகள் உள்ளது.

பிற வங்கிகள்

பிற வங்கிகளில் உள்ள மோசடி வழக்குகளில் ஆக்ஸிஸ் வங்கியில் 189-ம், பாங்க் ஆ பரோடாவில் 176-ம், சிட்டி பாங்கில் 150 வழக்குகளும் ஆர்பிஐயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு கோடிகளுக்கு மோசடிகள் நடந்துள்ளன?

எஸ்பிஐ வங்கியில் 2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடிகளும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2,250.34 கோடிகளும், ஆக்ஸிஸ் வங்கியில் 1,998.49 கோடி ரூபாய் மதிப்பு அளவிலும் மோசடிகள் நடந்துள்ளது.