பிஎஸ்என்எல் ஆஃபர்

339 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் அழைப்புகள் அனைத்தும் இலவசம். அதே நேரம் தினமும் 2ஜிபி வரம்பில்லா தரவை பயன்படுத்தலாம் என்று பிஎஸ்என்எல் வட்டாரங்கள் கூறுகின்றன.

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை

எங்களது மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்க பிஎஸ்என்எல் விரும்புவதாகவும் எனவே சிறந்த ஆஃபர்களை வழங்கி வருவதாகவும் நுகர்வோர் மொபிலிட்டி இயக்குநரக தலைவர் ஆர் கே மிட்டல் தெரிவித்தார்.

ஜியோ ரிலையன்ஸ்

ஜியோ நெட்வொர்க்கை பொருத்த வரை 2017 மார்ச் 31 வரை தினமும் 1 ஜிபி வரம்பில்லா தரவு மற்றும் இலவச குரல் அழைப்புகள் சேவை அளிக்கின்றது. அதற்குப் பிறகு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 வரை 2 ஜிபி வரம்பில்லா தரவுடன் இலவச அழைப்பு சேவை அளிக்கப்படும். ஆனால் 99 ரூபாஉ ஒரு வருடத்திற்கும், 303 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனமும் மூன்று மாதத்திற்கு 30 ஜிபி தரவை மார்ச் 13-ம் தேதி வரை ஆச்சிர்யமுட்டும் ஆஃபராக வழங்குகின்றது.