குறைந்த விலை வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ: ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 8.35%

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குறைந்த விலை வீட்டுக்கடனுக்கான வட்டி விகி தத்தை 0.25% குறைத்துள்ளது.

ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 8.6 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள கடனாளிகள் பிரதான் மந்தி அவாஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.67 லட்சத்திற்கு வட்டிக்கான மானியத்தைப் பெறலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. நடுத்தர வருமான குடும்பத்தினர் பிரதான் மந்திரி அவாஸ் (நகர்புறம்) திட்டத்தின் கீழ் முதல் முறையாக வீடு வாங்கினால் வீட்டுக்கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் 1 சதவீதம் முதல் 1.20 சதவீதம் வரை வங்கிகள் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைத்து அறிவித் திருப்பதால் வீட்டுக்கடன் வாங்கி யவர்களுக்கு மாத இஎம்ஐ தொகை கணிசமாக குறைந்துள் ளது. கட்டுப்படியாகும் விலையி லான வீடுகள் கட்டுவதற்கு எஸ்பிஐ பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளாது. உதாரணமாக வீடுகள் கட்டுவதற்கான கடனில் சலுகைகளை அறிவிக்க முன்வந்துள்ளது.

“வீட்டுக்கடனுக்கான கோரிக் கைகள் சமீபகாலமாக மிக அதிகமாக வந்துள்ளது. தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள தால் பல லட்சம் பயணாளிகளுக்கு உதவியாக இருக்கும். அவர்களின் வீடு வாங்கும் கனவு நினைவாகும்’’ என்று எஸ்பிஐ வங்கியின் தேசிய வங்கி குழும பிரிவின் நிர்வாக இயக்குநர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் 30 லட்ச ரூபாய்க்கு மேலான வீட்டுக்கடனுக்கு வட்டிவிகிதத்தில் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங் களில் 0.50 சதவீதம் வரை குறைத்து எஸ்பிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டு மல்லாமல் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 6.75 சத வீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.