ஒவ்வொரு முறை ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போதும் ரூ.25 கட்டணம்: எஸ்பிஐ முடிவு

ஏடிஎம் சேவைக் கட்டணங்களை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 1 முதல் எஸ்பிஐ ஏடிஎம்.மில் ஒரு முறை பணம் எடுத்தால் அதற்கு சேவைக் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். ரூபே அட்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

4 முறைக்கு மேல்

ஒரே மாதத்தில் 4 முறைக்கு மேல் ஏடிஎம்.மில் பணம் எடுத்தால் அதற்கும் ரகவாரியாக கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது வாடிக்கையாளர் தனது வங்கிக் கிளையில் உள்ள ஏடிஎம் ஒவ்வொரு முறையும் ரூ.50 சேவைக் கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

வேறு ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தால் ரூ.20 கட்டணமாகவும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும். கிளையில் உள்ள ஏடிஎம் அல்லாது வேறு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் ரூ.10 சேவை கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட்டுகளுக்கும் கெடுபிடி..

வங்கி முகவர்கள் மூலம் டெபாசிட் செய்யப்படும் ரூ..10,000 தொகைக்கு 0.25% கட்டணமும் குறைந்தது ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை சேவைக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும். அதேபோல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். ரூ.2000 பணம் எடுத்தால் 2.50% சேவைக் கட்டணம் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.6 வரை சேவை வரியும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil