ஈபிஎப் வட்டி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு 12 சதவீத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியை வைத்து வட்டி விகிதம் கணக்கிடப்படும். ஊழியர்களின் சம்பளம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக அல்லது சமமாக இருக்கும் போது 12 சதவீதம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியுடன் நிறுவனம் சார்பாக 3.67 சதவீதம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியும் வழங்கப்படும்

15,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வாங்குதல் ஊழியர் ஒருவர் 15,000 ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் போது 3 வகையான முறைமைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு முறையை நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும். அதிகபட்சமாக ஊழியர்களுக்கு முதல் முறைமை தான் வழங்கப்படுகின்றது.
முறை 1                                                                                                                                                                                         ஊழியர்கள் பங்களிப்பு: 12 சதவீத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி நிறுவன பங்களிப்பு: 12% அடிப்படை சம்பளம் மற்றும் 15,000 ரூபாயில் இருந்து 8.33%
முறை 2                                                                                                                                                                                    ஊழியர்கள் பங்களிப்பு: 12 சதவீத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி நிறுவன பங்களிப்பு: 15,000 ரூபாயில் இருந்து 3.67 சதவீதம்                                                                                                                                        முறை 3 ழியர்கள் பங்களிப்பு: 15,000 ரூபாயில் இருந்து 12 சதவீதம் நிறுவன பங்களிப்பு: 15,000 ரூபாயில் இருந்து 3.67 சதவீதம்

முதல் மாதம் வட்டி எப்படிக் கணக்கிடப்படும் பிஎப் கணக்கைத் துவங்கிய உடன் பூஜ்ஜியமாக இருக்கும், தனால் முதல் மாதம் வட்டி ஏதும் கிடைக்காது.
இரண்டாவது மாதம் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் முதல் மாத பங்களிப்பு பிஎப் கணக்கில் முதல் மாத க்ளோசிங் இருப்புத் தொகையில் சேர்க்கப்பட்ட பின் அது இரண்டாம் மாத க்ளோசிங் இருப்புத் தொகையாகக் கணக்கு வைக்கப்படும்.
மூன்றாம் மாதம் இரண்டாம் மாத க்ளோசிங் தொகையுடன் இரண்டாம் மாத ஊழியர்கள் மற்றும் நிறுவன பங்களிப்புச் சேர்க்கப்பட்டுக் கணக்கு வைக்கப்படும். இதே போன்று தொடர்ந்து ஒரு வருடம் கணக்கு வைக்கப்படும்.

ஒரு வருடத்தில் ஈபிஎ பேலன்ஸ் எவ்வளவு இருக்கும். ஊழியர்கள் பங்களிப்பு+நிறுவன பங்களிப்பு+ ஒவ்வொரு மாதமும் பெற்ற வட்டி தொகை அனைத்தும் சேர்த்து ஒரு வருடத்திற்கு ஒரு பெறும் தொகையாகப் பிஎப் கணக்கில் சேர்க்கப்படும்.                                                                                                                   பிஎப் கணக்கிற்கு வட்டி எவ்வளவு? பிஎப் கணக்கிற்கு ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். 2015-2016 ஆண்டு 8.8 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டது. இதுவே 2016-2017 நிதி ஆண்டிற்கு 8.7 சதவீதம் அளிக்கப்பட்டது.

பிஎ பணத்தைத் திரும்பப் பெறுதல் பிஎப் கணக்கில் வைக்கப்படும் தொகை 58 வயது அடைந்த பிறகு முழுமையாகத் திரும்பப் பெறலாம். இதுவே 57 வயதில் 90 சதவீதம் கார்பஸ் தொகையை மட்டும் திரும்பப் பெற முடியும். அதே பொன்று இடையிலும் பல வகைகளில் பிஎ பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.