மத்திய அரசு, தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாகப் புதிய நிதி திட்டத்தை வடிவமைத்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயிற்சிக்காக நிறுவனங்கள் செலவிடும் தொகையை மத்திய அரசே ஏற்கும் வகையில் உள்ளது இப்புதிய திட்டம்..

36 சதவீத நிறுவனங்கள்

இந்தியாவில் தற்போது வெறும் 36 நிறுவனங்கள் மட்டுமே இன்-ஹவுஸ் அதாவது, தங்கள் நிறுவனத்திற்கான திறன் தேவையை ஊழியர்களுக்குத் தன் நிறுவனத்திலேயே பயிற்சி அளித்து வருகிறது.

புதிய திட்டத்தின் நோக்கம்..

இந்தியாவில் தற்போது இருக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் போதிய திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்கத் தவறியுள்ளது. இதனை வரைவாகவும் சரியான முறையில் உருவாக்கவும் மத்திய அரசு தற்போது RIC திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

RIC திட்டம்

இப்புதிய திட்டம் குறித்து மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர் கூறுகையில், 62 நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Reimbursable Industry Contribution எனப்படும் ஆர்ஐசி திட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிதியும் நிறுவனங்களும்

ஒவ்வொரு நிறுவனத்தின் மீது தனியாக வரி அல்லது தற்போது நிறுவனங்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR)-க்கு செலவிடும் தொகையைத் திறன் மேம்பாட்டு நிதிக்கு மாற்றப்படும். இதன் மூலம் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியிக்கு மத்திய அரசே நிதியுதவியை அளிக்கும் (reimbursement) இதுவே RIC திட்டம் என இத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

BSNL Employees Union Nagercoil