மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் (வயது 66) இன்று (29.07.2017) மாலை 6 மணிக்கு, ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு தூத்துக்குடி மாவட்டச்சங்கம்  தனது அஞ்சலியை செலுத்துகிறது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி வழிகாட்டியவர் தோழர் ஆர். முத்துசுந்தரம். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க முன்நின்று உழைத்தவர். தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக போராடியும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி கிடைக்கச் செய்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

       அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும்,அரசு ஊழியர்களுக்கும் , தோழர்களுக்கு ம்  நாகர்கோவில்   மாவட்டச்சங்கம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், தோழருக்கு அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.