அன்புத்தோழர்களே
நமது BSNL CCWF சம்மேளனம் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முறையான அறிவிப்பை 23 11 2017 அன்று Chairman cum Managing Director, BSNL, New Delhi Secretary, Department of Telecom New Delhi, Chief Labour Commissoner, New Delhi ஆகியோருக்கு அளித்தது. போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.
வேலை நிறுத்த போராட்ட் அறிவிப்பில் நமது சம்மேளனம் எழுப்பியிருந்த கோரிக்கைகளின் மீது இரண்டாம் கட்ட சமரச பேச்சு வார்த்தை 22 02 2018 அன்று டெல்லி தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ள Regional Labour Commissoner முன்பு நடைபெற்றது.
சமர பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின் தரப்பில் BSNL அதிகாரிகளும் சம்மேளனத்தின் சார்பில் தோழர்கள் V A N நம்பூதிரி, அகில இந்திய தலைவர், அனிமேஸ் மித்ரா, பொதுச் செயலர் C. பழனிச்சாமி மற்றும் C. வினோத் குமார் மாநிலச் செயலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளின் முக்கிய சாரம்சம்
1. 7 ஆவது சம்பளக் கமிஷன் அடிப்படையில் கேசுவல் லேபருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 18 000 வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்ட்து.
2. ஒப்பந்த தொழிலாளர்கள் PAYMENT OF GRATURITY ACT 1972 ன் அடிப்படையில் கிராஜுட்டி பெற தகுதியுண்டு. வழங்கப்படவில்லை என்றால் சம்பந்தபட்ட தொழிலாளர் நல அதிகாரியிடம் மனு அளித்து கிராஜுட்டி பெற்றுக் கொள்ள வேண்டும்
3. மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 350 + VDA எங்கெல்லாம் வழங்கப்பட வில்லையோ அங்கெல்லாம் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து பெற்றுக் கொள்ள வேண்டும். ( தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் தான் குறைந்த பட்ச ஊதியம் பெற்று வருகின்றனர். உபி போன்ற பிற மாநிலங்களில் இன்றும் 2000 ரூபாய் முதல் 3000 வரை தான் சம்பளம் பெற்று வருகின்றனர்.)
4. நிரந்தரம் சம்பந்தமாக எந்த ஒரு திட்டமும் BSNL நிர்வாகத்திடம் இல்லை என்று அறிவித்தது. எந்த ஒரு தொழிலாளியும் நீதி மன்றம் சென்று சாதகமான தீர்ப்பை பெற்று வந்தால் அது அமுல் படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட்து.
5. EPF ESI அமுல் படுத்துவது தொடர்பாக சம்பந்தப் பட்ட இலாக்காகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமுல் படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
6. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை 22 03 2018 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இரண்டு நாட்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் செய்த காரணத்தால் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அடுத்து நாம் நடத்தும் தொடர் போராட்டங்கள் மூலம் மேலும் முன்னேறுவோம்

BSNL Employees Union Nagercoil