சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தால் எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிகளவில் உயர்த்தியுள்ளனர். இதன் பெட்ரோல் விலை 4 வருட உயர்விற்கும், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கும் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு லீட்டர் பெட்ரோல் விலை சுத்திகரிப்பிற்குப் பின் 28.35 ரூபாய் மட்டுமே என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

வரி…

இந்திய மக்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்றவற்றில் பெருமளவு வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இது நாட்டின் மிகப்பெரிய வர்த்தகப் பொருள் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதன் மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பெறும் விதமாக அதிகளவிலான வரியை விதித்தது வருகிறது.

பெட்ரோல் விலை

இந்திய சந்தையில் விற்கப்படும் பிராண்டட் அல்லா பெட்ரோல் விலை மற்றும் வரி விதிப்புகள் கச்சா எண்ணெய் விலை: 28.35 ரூபாய்

போக்குவரத்துக் கட்டணம் (கச்சா எண்ணெய் விலை உடன்): 31.08 ரூபாய் இது டீலர்களுக்கு விற்னை செய்யும் போது: 35.05 ரூபாய் கலால் வரி: 19.48 ரூபாய் (அடிப்படை கலால் வரி 4.48 ரூபாய், சிறப்புக் கூட்டு கலால் வரி 7 ரூபாய், சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் 8 ரூபாய்) டீலர் கமிஷன்: 3.60 ரூபாய் மதிப்பு கூட்டு வரி: 15.70 ரூபாய் (டெல்லியில் VAT 27சதவீதம்) ஆக மக்களுக்கு விற்பனை செய்யும்போது 73.83 ரூபாய்.

டீசல் விலை

கச்சா எண்ணெய் விலை: 28.35 ரூபாய் போக்குவரத்துக் கட்டணம் (கச்சா எண்ணெய் விலை உடன்): 33.16 ரூபாய் இது டீலர்களுக்கு விற்னை செய்யும் போது: 37.31 ரூபாய் கலால் வரி: 15.33 ரூபாய் (அடிப்படை கலால் வரி 6.33 ரூபாய், சிறப்புக் கூட்டு கலால் வரி 1 ரூபாய், சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் 8 ரூபாய்) டீலர் கமிஷன்: 2.52 ரூபாய் மதிப்பு கூட்டு வரி: 9.53 ரூபாய் (டெல்லியில் VAT 17.30சதவீதம்) ஆக மக்களுக்கு விற்பனை செய்யும்போது 64.69 ரூபாய்.

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு 35.05 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுக்கிறது. இதில் மத்திய அரசின் கலால் வரியாக 19.48 ரூபாய், டீலர் கமிஷன் 3.60 ரூபாய். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 58.13 ரூபாய். இதனைத் தாண்டி மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியும் உண்டு. டெல்லியில் 27 சதவீதம், மகாராஷ்டிராவில் 40.73 சதவீதம். தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரியாக 18.46 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்றைய பெட்ரோல் விலை 76.59 ரூபாயாக உள்ளது.

BSNL Employees Union Nagercoil