மாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம் ஊழியர்கள் பெரிய அளவிலான நன்மை அடைவார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஊழியர்கள் சங்கம் இதுகுறித்துப் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்த ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது அரசு.

இந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம் கிராஜூவிட்டி கால அளவை 5 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் தொழிலாளர் அமைச்சகம், இதுபற்றிப் பிற துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மத்தியில் ஆலோசனை செய்து வருகிறது, இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் சில வாரத்தில் தெரியும்.

BSNL Employees Union Nagercoil