அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (பிஸ்னல்), சென்னை, தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமின்றி, கொல்கத்தா உட்பட பல பிஎஸ்என்எல் வட்டடங்களில் உள்ள, அதன் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.118/- என்கிற ஒரு புதிய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. முதலில் தமிழ்நாடு, சென்னை வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு, அறிமுகமான இந்த ரூ.118/- ஆனது, தற்போது நிறுவனத்தின் பெரும்பாலான வட்டங்களில் அணுக கிடைக்கிறது. இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஜியோவை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு திட்டமாகும்.!

நன்மைகளை பொறுத்தவரை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் டேட்டா நன்மையை வழங்குகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியாகி டெலிகாம் சந்தையை கலக்கிய ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-ஐ வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு திட்டமாகும்.

அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை.!

பிஎஸ்என்எல் 118-ன் விரிவான நன்மைகளை பொறுத்தவரை, (மும்பை மற்றும் தில்லி வட்டங்களை தவிர்த்து) ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் தினசரி அழைப்பு வரம்பு பற்றிய விவரங்கள் இல்லை. எனவே மற்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை இருக்கும் என்று கருதுவது பாதுகாப்பானது.

இலவச ரிங்டோன்.!

டேட்டா நன்மையை பொறுத்தவரை, செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இலவச ரிங்டோன் (Personalised Ring Back Tone) சேவையையும் பயனர்கள் பெறுவார்கள். இந்த சேவையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு பாடலை மாற்றியமைக்கலாம் என்பதும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு கூடுதல் கட்டணங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜிபி அளவிலான டேட்டா.!

முன்னர் குறிப்பிட்டப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து அறிமுகமாகி உள்ள இந்த புதிய திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-க்கு எதிரான ஒரு திட்டமாகும். ஜியோவின் ரூ.98/- ஆனது மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

BSNL Employees Union Nagercoil