வேனின் மீது மேல் இருந்தபடி குறிபார்த்து சுடும் ஸ்னிப்பர்களை வைத்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ மூலம் அம்பலமானது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்தியவர்கள். எனவே, இதையெல்லாம் வைத்து பார்த்தால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது என்ற சந்தேகம் அதிகரித்து

குண்டுகள் பாய்ந்த இடம்

இதனிடையே 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு நடத்தப்படப்போகிறது என்பது, சில முக்கிய பிரமுகர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், கொல்லப்பட்டவர்கள் உடலில் பாய்ந்த குண்டுகள் துளைத்த இடங்களை வைத்து பார்க்கும்போது இது குறிபார்த்து சுடப்பட்டதை போலத்தான் தெரிந்தது.