மத்திய அரசு இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தினை டெலினார் இந்தியா உடன் இணை அனுமதி அளித்தை அடுத்து டெலினார் ஊழியர்கள் வேலையினை இழக்க இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. டெலினார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த ஊழியர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து அனைத்து டெலினார் ஊழியர்களுக்கு அடுத்து என்ன என்ற ஒரு மின்னஞ்சல் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உறுதி செய்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனமும் இதனை உறுதி செய்யும் படி அனைத்து டெலினார் ஊழியர்களுக்கு எங்களது வணிகத்திற்குத் தேவைப்பட மாட்டார்கள் என்று நினைப்பதாகத் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை

தொலைத்தொடர்பு துறை மே 14ம் தேதி ஏர்டெல் நிறுவனத்துடன் டெலினார் வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள இந்த அனுமதியால் ரிலையன்ஸ் ஜியோவை விட 2 மடங்கு அதிக ஊழியர்களை வைத்துள்ள நிறுவனமாக உறுவெடுக்க உள்ளது.

டெலினார் ஊழியர்

டெலினார் ஊழியர் ஒருவர் ஏர்டெல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் அவர்கள் இணைவிற்குப் பிறகு உங்களுக்கு இங்கு வேளை இல்லை என்று தெரிவித்ததாகவும் இழப்பீடு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வளவு இழப்பீடு

டெலினார் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்களிடம் இருந்து ராஜினாமா கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு 5 மாத சம்பளத்தினை ஏர்டெல் நிறுவனம் அளிக்க உள்ளதாகவும் நான் இன்னும் எந்த முடிவை எடுக்கவில்லை என்று ஊழியர் ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஊழியர்கள் எண்ணிக்கை

டெலினாரில் 1,400 ஊழியர்கள் உள்ளதாகவும் அதில் 700 நபர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பிறருக்கு நல்ல நிதி உதவி, மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச தொலைப்பேசி அழைப்புகள் சேவை போன்றவை வழங்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்னஞ்சல்

ஏர்டெல் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உங்களுக்கு டெலினார் நிறுவன பார்தி ஏர்டெல் உடன் இணை இருக்கிறது. அதன் சமந்தமாக உங்களுடன் தனியாக விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

யாருக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது?

முதற்கட்டமாக ஆந்திரா (தெலுங்கானா), பீகார், மகாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம் (கிழக்கு), உ.பி. (மேற்கு) மற்றும் அசாம் ஆகிய மாநில ஊழியர்களுக்கு ஏர்டெல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

BSNL Employees Union Nagercoil