ஜிஎஸ்டி என்ற ஒரே வரி விதிப்பு முறையால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை,எதனுடைய விலையும் குறையவில்லை என்று நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, ஜிஎஸ்டி வந்த பிறகு, மளிகைப் பொருட்கள் கட்டணம் குறைந்துள்ளதா? என்ற கேள்விக்கு 63 சதவிகிதத்தினர் ‘இல்லை’ என்று பதிலளித்துள்ளனர்.ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; பொருட்களின் விலைகுறைந்துள்ளது என்று மத்திய பாஜக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.இந்நிலையில், ஜிஎஸ்டியால் பொருட்களின் விலைகள் குறைந்துள் ளதாக கூறுவது உண்மைதானா? என்பதைக் கண்டறிய ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. நாடு முழுவதும், 215 மாவட் டங்களில், 32 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், எந்த பொருட்களின் விலையும் குறையவில்லை என்றுமக்கள் கூறியுள்ளனர்.குறிப்பாக, மளிகைப் பொருட்களுக்கான விலைவாசி குறைந்துள்ளதா? என்ற கேள்விக்கு, 21 சதவிகிதத்தினர் மட்டுமே தங்களது வீட்டுக்கான மளிகைப் பொருள் விலைகள் குறைந்துள் ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால்,63 சதவிகிதத்தினர் மளிகைப் பொருட் களின் விலை குறையவில்லை என்று கூறியுள்ளனர். 16 சதவிகிதத்தினர், விலை குறைந்துள்ளதா? என்பதை உறுதியாக கூற முடியவில்லை என்று பதிலளித்துள்ளனர்.உணவகங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால் பயன் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கும் பெரும்பாலானோர் இல்லை என்று கூறியுள்ளனர். 57 சதவிகிதம் பேர் கட்டணம் குறையவில்லை என்றும், 15 சதவிகிதம் பேர் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், 28 சதவிகிதம் பேர் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மொபைல், சினிமா கட்டணம் போன்றவற்றின் உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 54 சதவிகிதம் பேர், முன்பை விட கட்டணம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 19 சதவிகிதம் பேர் கட்டணத்தில் மாற்றமில்லை எனவும், 13 சதவிகிதத்தினர் உறுதியாகத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். 14 சதவிகிதம் பேர் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவித்துள் ளனர்.ஒட்டுமொத்தமாக, ஜிஎஸ்டி-யால்எந்த பொருளின் விலையும் குறையவில்லை என்பதே ஆய்வின் முடிவாக வெளிப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil