சரக்கு மற்றும் சேவை வரியான ஜிட்ஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்வி அடைந்துள்ளதை நிதி அமைச்சா செயலாளரான ஹஸ்முக் ஆதியா ஒப்புக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை சிறப்பாக செயல்படுத்த கடினமாக உழைத்து வரும் நிலையிலும் அது சில நேரங்களில் தோல்வி அடைந்தே வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை குறைந்த காலகட்டத்திற்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, எனவே தொழில்நுட்பத்தினை முழுமையாகத் தயார் செய்வதற்கான நேரம் போதுமானதாக இல்லை எனவே தான் இந்தத் தோல்விகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் அற்புதமான நபர்கள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் இன்று வரை தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்றும் நிதி அமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.   எளிமை ஜிஎஸ்டி வரி முறையினை தொழில்நுட்பங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் எளிமைப்படுத்த முடியும். தற்போது பல வகையில் அதனை எளிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் மேலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியதும் உள்ளது. வணிகங்கள் பாதிப்பு 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையிலும் 50 சதவீத வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை என்று ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி வந்த பிறகு வேலைகள் கூடியுள்ளது மற்றும் அதிக நேரம் செலவாகிறது என்றும் பல வணிகங்கள் கூறுகின்றனர்.

BSNL Employees Union Nagercoil