ஐடியா – வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இனையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமான நிலையில் இதற்கு என்ன காரணம் எனப் பிரதமர் அலுவலகம் தொலைத்தொடர்பு துறையினைக் கேள்வி கேட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இரண்டு நிறுவனங்களும் இணைவதற்கான அனுமதிகளை முழுமையாகப் பெற்றுள்ள நிலையில் தொலைத்தொடர்பு துறைக்குச் சட்டப்பூர்வமாகச் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இணைவு

வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணையும் போது வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றம் பெறும் என்று கூறப்படுகிறது. முழுமையானாக இணைந்த பிறகு இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்கான ஏர்டெல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு முதல் இடத்தினை வோடாபோன் ஐடியா பிடிக்கும்.

தாமதத்திற்கான காரணம்

பிரதமர் அலுவலகம் ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் இணைவு தாமதம் ஆவதற்கான காரணங்களைக் கேட்ட போது சில சட்டப்பூர்வமான கருத்துக்கள் தேவைப்படுகிறது என்று அதனைப் பெற்றவுடன் உடனடியாக இரண்டு நிறுவனங்களும் இணையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு என்ன அக்கரை தனியார் நிறுவனங்கள் இணைவதன் மீது மத்திய அரசுக்கு என்ன அக்கரை என்று கேட்ட போது இது குறித்து விவரம் அறிந்தவர்கள் “இரண்டு நிறுவனங்களும் இணைந்தால், இந்தியாவில் வணிகம் செய்வது எளிமை” என்பதற்கான உதாரணமாகக் கட்டவே என்று தெரியவந்தது.

BSNL Employees Union Nagercoil