உண்மையை உளறி சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் கட்காரி

மும்பை, ஆக. 5 –

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மகாராஷ்டிரா வில் மராத்தா சமூக மக்கள்போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது, வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது என்று மோடி ஆட்சி யின் உண்மை நிலவரத்தை உளறிக் கொட்டி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிராவில் அரசியல்ரீதியாகவும், மக்கள்தொகை யிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் மராட்டிய சமூகத் தினர், தங்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம்இடஒதுக்கீடு கேட்டு கடந்தஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரத் தில் பேருந்துகளுக்கு தீவைப்பு, கல்வீச்சு, கடை யடைப்பு போராட்டம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில், அவுரங்கா பாத் மாவட்டத்துக்கு வந்திருந்தமத்திய சாலைப் போக்குவரத்து, துறை அமைச்சர் நிதின்கட்காரியிடம் மராட்டிய மக்க ளின் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது : மராத்தா மக்கள் கேட்பது போல் இடஒதுக்கீட்டை கொடுத்து விடுகிறோம் எனக்கொண்டால், வேலை வாய்ப்பை யார் கொடுப்பது? வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது? வங்கித்துறையை எடுத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால்,மனிதர்களுக்கு வேலையில் இடமில்லை. அரசுத்துறை களில் வேலை வாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, இளைஞர்களுக்கு எங்கே இருக்கிறது வேலை?மக்களும் தங்கள் நலனுக்காக நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் இதே போன்று கூறுகிறார்கள்.பீகார், உத்தரப்பிரதேசத்தில்பிராமணர்கள் வலுவாகஇருக்கிறார்கள். அரசியலில் ஆதிக்கம் செலுத்து கிறார்கள். அவர்களும் தங்க ளை பிற்படுத்தப் பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.“ஏழைகள் ஏழைகள்தான். அவர்களுக்குள் மதம், மொழி, கிறிஸ்தவர்,இந்து, மராட்டியர் என்ற பாகுபாடு இல்லை” என்று சிலர் கூறுகிறார்கள். மற்றொரு பிரிவினரோ ஒவ் வொரு சமூகத்திலும், மதத்திலும் இருக்கும் ஏழைகளைக்காப்பாற்ற வேண்டும், அவர் களை உயர்த்திவிட வேண்டும் என்கிறார்கள். மராட்டிய மக்களின் போராட்டத்தை அரசிய லாக்காதீர்கள். அரசியல் நோக்கத்துக்காகவே இடஒதுக்கீடு என்ற விஷயம் முன்ன்வைக்கப்படுகிறது. சமூக பொருளாதார சிந்தனையையும், பொருளாதாரத்தை யும், அரசியலையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.இடஒதுக்கீடுகோரும் மராத்தா மக்களின் போராட்டத் தை எதிர்கொள்ளத் துப்பில்லா மல், மத்திய அமைச்சர் ஒருவரே வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் பிரதமர் மோடி நாடெங்கும் பிரச்சாரம் செய்யும்போது, எமது அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, என்று முந்தைய அரசுகளை ஒப்பிட்டு தன் அரசு ‘அச்சே தின்’ என்றெல்லாம் பேசி வரும் நிலையில், மூத்த அமைச்சர் வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறது என்று பேசியிருப்பது பாஜக – ஆர்எஸ் எஸ் கும்பல்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்திய புள்ளிவிவ ரங்களின் படி, இந்தியாவில் 77 சதவீத வீடுகளில் நிரந்தரமான ஊதியம் இல்லை. மொத்த வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக இருக்கிறது. கிராமப்புறத்தில் வேலை யின்மை விகிதம் 4.3 சதவீதமும்,நகர்ப்புறத்தில் 6.5 சதவீத மாகவும் இருக்கிறது. ஆண் களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையின்மை 4 சதவீதமும், மேற்குவங்கத்தில் 8.7 சதவீதமும், ராஜஸ்தானில் 6.2 சதவீதமும், ஆந்திராவில் 6.0 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL Employees Union Nagercoil