• கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இந்திய அளவில் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளனர். சுமார் 30கோடி ரூபாய் வரை வர உள்ளது. தங்களிடம் பிடிக்கப்பட உள்ள ஒரு நாள் ஊதியத்திற்கு மேல் ஒரு சில மாவட்டங்களில் ஊழியர்கள் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்திடம் நன்கொடை வழங்கினர். அவ்வாறு சேர்ந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடை, பாத்திரங்கள், நோட்டு புத்தகங்கள், படுக்கை விரிப்புகள், பாய்கள், நாப்கின்கள், துண்டு உள்ளிட்ட பொருட்களாக மாற்றினர். அதனை 31.08.2018 தமிழ் மாநில சங்க நிர்வாகிகளும், கோவை மாவட்ட சங்கத்தின் தோழர்களும் எடுத்து சென்று, கேரள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள தோழர் M.B. ராஜேஷ் MP மூலமாக வழங்கப்பட்டது. நிதி உதவி செய்திட்ட தோழர்களுக்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்

BSNL Employees Union Nagercoil