இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டு உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை.

ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

மோடி அரசு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் மீண்டும் பெட்ரோ

இப்போது என்ன விலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது.தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்.

மும்பை மோசம் மும்பையில் பெட்ரோல் விலை 89.10 ரூபாய்க்கு விற்கிறது. அங்கு விரைவில் ரூ.90 ஆக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் மும்பையில்தான் மோசமான நிலை நிலவுகிறது. அங்கு விரைவில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய் தொடும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.