இந்திய பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா தனது ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் ரூ.50,000 கோடி வரை கடன் உள்ளது.இதனால் ஏர் இந்தியாவை விற் பனை செய்வதற்கான முயற்சியிலும்மத்திய பாஜக அரசு ஈடுபட்டது. ஏர்இந்தியாவின் பங்குகளை வாங்க எந்த தனியார் நிறுவனமும் முன்வர வில்லை. இதனால் அத்திட்டத்தை தற்போதைக்கு கைவிட்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்து களை விற்பனை செய்து கடனை ஈடுகட்ட முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பிளாட்டுகள் என ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்ய டெண்டர்விடப்பட்டுள்ளது என்று ஏர் இந்தி யாவின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐசெய்தி நிறுவனத்திடம் கூறினார்.

BSNL Employees Union Nagercoil