யமஹா தொழிலாளர்கள்போராட்டம்ஒரகடம்போராட்டத்தில் ஈடுபட்ட வந்த யமஹா தொழிலாளர்களை காவல்துறை அப்புறப்படுத்த முயன்ற போது செல்போன் டவரில் ஏறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வடகால் கிராமத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் 800 நிரந்தர தொழிலாளர்களும் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் பணிசெய்துவருகின்றனர். இவர்களின் சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு தொழிற்சங்கம் அமைத்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இதனையடுத்து தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளில் நிர்வாகம் கவனம் செலுத்தாத காரணத்தினால், தொழிலாளர் நல வாரியத்தில் மனு அளித்தனர் இதனையடுத்து இருதரப்பினரையும் தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால் நிர்வாகம் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனிடையே சி. பிரகாஷ் மற்றும் ராஜமணிகண்டன் ஆகியோரை யமஹா நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து காவல்துறை போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. தொழிலாளர்கள் ஆலையில் உள்ள செல்போன் டவர், குடிநீர் பைப் லைன், உள்ளிட்ட உயர்ந்த இடங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி, திருப்பெரும் பதூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன். உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

Theekkathir ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 26, 2018