அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு புதன் கிழமையன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித் துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியபொழுது 73 ரூபாய் 26 ஆக இருந் தது. அதன்பின் தொடர்ந்து அது பலவீனமடைந்து, 73 ரூபாய் 35 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.அக்டோபர் 1-ஆம் தேதி பங்குச்சந்தை நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 91 காசுகளாக இருந்தது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை என்பதால் புதன்கிழமையன்று பங்குச் சந்தைமீண்டும் துவங்கியது. அப்போது,சென்செக்ஸ் குறியீடு 245.51 புள்ளிகள் சரிவடைந்து 36,280.73 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்ததுடன், ரூபாய் மதிப்பும் வரலாறு காணாதவகையில் 73 ரூபாய் 35 காசுகளாக சரிந்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 86.65 புள்ளிகள்குறைந்து 10,921.65 ஆக இருந் தது.

BSNL Employees Union Nagercoil