28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு முடிவுகளில் மிக மோசமான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மதிப்பெண்களில் தளர்வை தரவேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கடுமையாக வாதாடி வந்தது. 10.07.2018 அன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களிடமும் இதே பிரச்சனை விவாதிக்கப்பட்டது. BSNL ஊழியர் சங்கத்தின் கடுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக சில நாட்களுக்கு முன் கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான உத்தரவினை பிறப்பித்தது. அந்த உத்தரவின் காரணமாக 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. BSNL உருவான இந்த 18 ஆண்டு காலத்தில் இலாகா தேர்வில் மதிப்பெண்கள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 22 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அனைவருக்கும் தமிழ் மாநில சங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

BSNL Employees Union Nagercoil