சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், கோவை, மதுரை ரயில்வே நிலையங்கள் போன்ற பெரிய (ஏ-தர மற்றும் ஏ.1 தர நிலையங்கள்) மிகப்பெரிய ரயில்வே நிலையங்களையும் அதை ஒட்டிய நிலங்களையும் தனியாருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏழை – எளிய மக்கள் பயன்படுத்தும் கிராமத்து ரயில் நிலை யங்களை லாபம் இல்லை என்று கூறி மோடி அரசு மூடி வருகிறது. மறுபுறம் இந்தியாவில் உள்ள சுமார் 600 பெரிய, மிகப்பெரிய ரயில்வேசந்திப்புகளை அதை ஒட்டியுள்ள காலி நிலங்களுடன் பெரு நிறுவனங்களுக்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு (99 ஆண்டுகள்) குத்த கைக்கு விட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) உதவி பொதுச் செயலாளர் டி. மனோகரன் அளித்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:ஜூன் 14, 2015 அன்று மத்திய அமைச்சரவை ஏ-1 மற்றும் ஏ-தரத்தில் உள்ள 400 ரயில்நிலையங்களை தரம் உயர்த்த 45ஆண்டுகளுக்கு ரயில்நிலையங்கள் மற்றும் அதனை ஒட்டிய இடங் களை குத்தகைக்கு விட அனுமதி தந்தது. இதனை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய ரயில்வே நிலைய வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஹபிப் கஞ்ச்(போபால்), சூரத், சென்னை சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களை மட்டுமே குத்த கைக்கு எடுக்க போட்டி நிலவியது. மலேசியா, ஜப்பான் என சில வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டின. இத்திட்டம் எதிர்பார்த்த அளவுவெற்றி அடையவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களான டாட்டா ரியாலிட்டி, லார்சன் அண்ட்டர்போ, எஸ்ஸெல் இன்பரா பிராஜெக்ட், ரிலையன்ஸ் இன்பரா பிராஜக்ட் போன்ற இந்திய பிரபல கட்டுமான நிறுவனங்கள் நீண்ட கால குத்தகைக்கு இந்திய ரயில் நிலையங்களை கோரின. மேலும் உலகத் தரத்திற்கு மேம்படுத்த முதலீடு செய்யும் நிலையங்களின் மின்சார பராமரிப்பு, டிக்கெட் சோதனை, விநியோகம், கார் பார்க்கிங், உள்குத்தகை போன்ற பல பிரிவுகள் தங்களிடம் தர வேண்டும் என்றன. ஒப்பந்த ஷரத்துகளில் மாற்றங்கள் கோரின. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஏலம் பலமுறை தள்ளிப்போனது. 600 முக்கிய ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த ரூ. ஒரு லட்சம் கோடி முதலீடு தேவை என கணக்கிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை முடுக்கிவிட கடந்த அக்டோபர் 3 ஆம்தேதி கூடிய மத்திய அமைச்சரவை99 ஆண்டுகளுக்கு ரயில்நிலை யங்கள், அதனை ஒட்டியுள்ள காலி மனைகள், வான்பரப்பு குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்திருக்கிறது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட குத்தகைகாலத்தால் சுமார் ஒரு நூற்றாண்டு க்கு அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள் தனியார்மயமாவது உறுதியாகி இருக்கிறது. இதனால் பல்வேறுத் துறை ரயில்வே ஊழியர்கள் படிப்படியாக ரயில் நிலையங்களில் விலக்கிக் கொள்ளப்படுவார்கள். பயணிகள் ஓய்வு அறை, உணவு, கழிவறை கட்டணங்கள் உயரும். சாமானியர்கள் ரயில் பயணத்தில் அடிப்படைத் தேவைகளுக்கு அல்லாட நேரிடும்.ஆண்டுக்கு ரூ. 35,000 கோடி சமூகத்தேவைகளுக்கு ரயில்வேத் துறை வாயிலாக அரசு செலவிடுகிறது. ஒருபக்கம் கூடுதல் கட்டணம், மறு பக்கம் கட்டணச் சலுகை என்ற நிலை உருவாகும். அகலப்பாதை, மின்மயத் திட்டங்களில் ரயில்வே முதலீடு செய்வதைப் போல படிப்படியாக ரயில் நிலையங்களை தரம் உயர்த்த முதலீடு செய்ய வேண்டும்.99 ஆண்டுகள் வரை ரயில்நிலையங்கள், காலி இடங்கள் குத்த கைக்கு விடும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தி யுள்ளது.இவ்வாறு டி.மனோகரன் அதில் தெரிவித்துள்ளார்.

BSNL Employees Union Nagercoil