தொழிலாளர் எழுச்சி : அரசு அலட்சியம்


32வது நாள்

எம்எஸ்ஐ தொழிலாளர் போராட்டம்

17வது நாள்

யமஹா தொழிலாளர் கிளர்ச்சி

காஞ்சிபுரம், அக். 7-காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களாக எம்எஸ்ஐ, யமஹா நிறுவனங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரு கிறார்கள். இந்த பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வை ஏற்படுத்தக் கோரி காஞ்சிபுரம் தேரடி அருகில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் – மனிதச்சங்கிலி நடைபெற்றது. சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் திருச்செல்வன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் உரையாற்றினர். யமஹா தொழிற்சங்க செயல் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அ.சவுந்தரராசன், “நாட்டின் அந்நிய செலாவணி யமஹா, ராயல்என்பீல்டு, ஹூண்டாய், நிசான் போன்ற வாகன தொழிற்சாலை நிறுவனங்களால் உயரவில்லை. அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பால்தான் உயர்கின்றது” என்றார். இந்த நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்தை முற்றிலும் மதிப்பதே இல்லை. தொழிற்சங்க உரிமை என்பது இந்த நிறுவனங்கள் போடும் பிச்சை அல்ல. பல ஆயிரம் தொழிலாளர் களின் போராட்டத்தால் கிடைத்த உரிமை. உயிரே போயினும் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவைக் காட்டி தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்ற மாவட்ட காவல் துறை துடித்தது. அரசும், தொழிலாளர் நலத்துறையும் தொழி லாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த உத்தரவை அமல்படுத்த மறுக்கும் காவல்துறை தொழிற் சாலைக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது என்றும் எங்கள் கோரிக்கை வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அ. சவுந்தரராசன் எச்சரிக்கை செய்தார்.

BSNL Employees Union Nagercoil