மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் அளித்துள்ள முறையீடுகளின் பேரில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால், அமைச்சர்தன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள் ளன.இதுகுறித்து தலைநகர் புதுதில்லியில் இயங்கிடும் இந்தியப் பெண் பத்திரிகையாளர் அணி(Indian Women’s Press Corps),

,பிரஸ் கிளப் ஆப் இந்தியா, பிரஸ்அசோசியேசன் மற்றும் சவுத் ஆசியன் விமன் இன் இந்தியா என்னும்அமைப்புகளின் சார்பாக கூட்டாகஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள் ளது. அதில் அவர்கள் கோரியிருப்பதாவது:ஊடகங்களில் பணியாற்றும்பெண்கள் பாலியல் சீண்டல்தொடர்பாக அளித்துள்ள முறையீடுகள் குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளாகிய நாங்கள்மிகவும் கவலைப்பட்டிருக்கிறோம். பணிபுரியும் இடங்களில்பெண்கள் மீது பாலியல் சீண்டல்என்பது சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய எதார்த்த நிலையாகும். ஊடக அமைப்புகளும் நிர்வாகங்களும் தங்களிடம் வருகின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்துப் பொதுவாக கண்டுகொள்வதில்லை.மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் அளித்துள்ள அறிக்கை, எங்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குலைவினை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தன்னுடைய அறிக்கையில் தனக்கெதிராக முறையீடுகள் அளித்தவர்கள் மீதுசட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார்.எம்.ஜே. அக்பர் அரசாங்கத்தின்உயர் பதவி ஒன்றில் உள்ள மூத்தநபர். அவருடைய அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்படக் கூடும். அவருக்கு எதிராக பெண்பத்திரிகையாளர்கள் அளித்துள்ளமுறையீடுகள் மீது பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும்மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் ஓர் அமைச்சராக இருப்பதாலும் அவர் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள அமைச்சராக இருப்பதாலும்இப்பிரச்சனை முக்கியத்துவம் பெறுகிறது. பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இத்தகு விசாரணை முடியும் வரையிலும் இதில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் தன் பதவியிலிருந்து கீழே இறங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அறநெறிப்படியும் பொது ஒழுக்க நடைமுறைகளின்படியும் சரியாக இருந்திடும். இவ்வாறு அக்பர் தன்பதவியைவிட்டு இறங்கிக்கொள்ளவில்லை என்றால், மாறாக முறையீடு தாக்கல் செய்த பெண் பத்திரிகையாளர்களை மிரட்டும் வேலையில் இறங்கினார் என்றால், நாங்கள் மிகுந்த நம்பிக்கைக்குலைவுக்கு உள்ளாவோம்.அக்பருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடுகள் மீது, முறையீட்டை அளித்த பெண்பத்திரிகையாளர்கள் மீது எவ்விதமான அச்சுறுத்தலோ அல்லது மிரட்டலோ இல்லாமல், பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறுபாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச் சர், விசாரணை முடியும் வரை தன்பதவியிலிருந்து இறங்கிட வேண்டும். அதுவே முறையாகும், பொருத்தமுடைய நடவடிக்கையுமாகும்.பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் சீண்டல் என்பது அநேகமாகப் பல இடங்களில் ஊடுருவிக் காணப்படும் காட்சியாகும். இதற்கெதிராக கடுமையான முறையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்விதமான தண்டனையுமின்றி இத்தகைய இழி செயல் கள் தொடர்கின்றன. இத்தகைய பாலியல் சீண்டல்களுக்கு எதிராகப் பேச முடியாத நிலையிலிருக்கும் பெண்கள் குறித்தும் ஆழமான முறையில் கவனம் செலுத்தி,அதனைச் சரி செய்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடக முதலாளிகளும் அரசாங்கமும் இதன்மீது ஆழமான முறையில் கவனம் செலுத்திடுவார்கள் என்றும், அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட் டுள்ள முறையீடுகளை உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டவைகளாகக் கருதிடமாட்டார்கள் என் றும் நம்புகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.

BSNL Employees Union Nagercoil