விழாக்கால சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில்தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

“தனலட்சுமி” என்ற இத்திட்டத்தின்படி, 18-10-2018 (ஆயுத பூஜை) மற்றும் 07-11-2018 (தீபாவளி) ஆகிய பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான பில்களை செலுத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும். வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில்தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் 1% தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3% தள்ளுபடி அடுத்துவரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பிஎஸ்என்எல் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2% தள்ளுபடி வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது

BSNL Employees Union Nagercoil