ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு மற்றும் 111 விமானங் கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப் பதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு கள் தொடர்பாக அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கி யுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு நடந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்பிலான 111 விமானங்களை போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங் களிடமிருந்து வாங்கின.

இந்த இரு நிறுவனங்கள் இணைப்பு மற்றும் விமானங்கள் வாங்கிய நிகழ்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த வருடம் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட் டது. விசாரணை நடந்துவரும் நிலையில் தற்போது அமலாக்கத் துறை இந்த வழக்கில் தனது விசா ரணையைத் தொடங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா இந்த இணைப்பு மற்றும் விமானங்கள் வாங்கிய நிகழ் வுக்குப் பிறகு பெரும் கடன் சுமையில் சிக்கியது. தொடர்ந்து லாபம் ஈட்டும் விமான சேவை களைத் திரும்பப்பெற்றது, இதனால் சில இந்திய மற்றும் சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் லாபமடைந்தன. இதனால் ஏர் இந்தியா திவாலாகும் நிலைக்குச் சென்றது. சிஏஜி தனது தணிக்கை அறிக்கையிலும் தேவை இல்லாத பட்சத்தில் 111 விமானங்களை வாங்கியது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில் இவ்விவகாரத் தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் ஆட்சி மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏர் இந்தியா 43 விமானங்களை வாங்க திட்ட மிட்டிருந்தது. ஆனால், அதன் பிறகு இந்தத் திட்டம் எதிர்கால சந்தை வாய்ப்புகளைக் காரணம் காட்டி மாற்றியமைக்கப்பட்டது.

ஏர் இந்தியா-இந்தியன் ஏர் லைன்ஸ் இணைப்பு, 111 விமா னங்கள் வாங்கியது, லாபகரமான விமான வழித்தடங்களை விட்டுக் கொடுத்தது மற்றும் மென்பொருள் வாங்கியது என பல்வேறு விவ காரங்களில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி தற்போது அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கியுள் ளது. விமான சேவை அமைச்சகம், ஏர் இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ் மற்றும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியில் பொறுப்பு வகித்த சிலரின் மீது என விசாரணை பட்டியல் நீள்கிறது.

சிபிஐ தனது விசாரணையில் பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், இவர்கள் மீது குற்றம், மோசடி மற்றும் ஊழல் உள் ளிட்ட பல புகார்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் இவர்க்ள் இந்த விவகாரத்தில் எடுத்த முடிவு களால் இந்தியக் கருவூலத்துக்கு பல ஆயிரம் கோடிகள் நஷ்ட மாகியுள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஏஜி தணிக்கை அறிக்கையில் தேவை இல்லாமல் 111 விமானங்களை வாங்கியது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

BSNL Employees Union Nagercoil