பொதுவாக டி.வி.யில் விளம்பரங்கள் தோன்றும்போது நாம் பெரும்பாலும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். ஆனால் வெகு அபூர்வமாக சில விளம்பரங்கள் நமது மனதை வெகுவாக பாதித்துவிடும். அந்த வகையில் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனம் தனது பிரிண்டரை பிரபலப்படுத்த தயாரித்துள்ள விளம்பர...