மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமலாக்க வலியுறுத்தி 14.11.2018 அன்று பேரணியை நடத்திட AUAB அறைகூவல் விடுத்துள்ளது. ஊதிய மாற்ற பிரச்சனையில் வேலை நிறுத்தம் செய்திட நாம் ஏற்கனவே முடிவெடுத்துள்ளோம். இது ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தமாகக் கூட இருக்கலாம். எனவே இந்த நவம்பர் 14 பேரணியை, ஊழியர்களை வேலை நிறுத்தத்திற்கு தயார் படுத்திட கிடைத்த வாய்ப்பாக நாம் பயன்படுத்திட வேண்டும். மிக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களையும் அதிகாரிகளயும் இந்த பேரணியில் பங்கேற்க செய்ய வேண்டும். அதே போல அரசின் BSNL விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், நமது கோரிக்கைகளையும் உள்ளடக்கிய அட்டைகளையும் பேனர்களையும் மிக அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்ல வேண்டும். இந்த பேரணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் AUABயில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்று திரட்டிட அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் அறைகூவல் விட்டுள்ளார்.