புதுதில்லி, நவ.28-பிஎஸ்என்எல் ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் வரும் டிசம்பர் 3 முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கு கிறார்கள். இதற்கான அறை கூவலை, ஏயுஏபி என்னும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக்குழு விடுத்துள்ளது.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலை வரிசையை உடனடியாக ஒதுக்கிட வேண்டும், பிஎஸ்என்எல் ஊழியர் பங்களிப்பு ஓய்வூதியம் அளிப்பது தொடர்பான அரசு விதியை அமல்படுத்திட வேண்டும், 2017 ஜனவரி 1 முதல் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்றகோரிக்கைகளை முன்வை த்து இவ்வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளார்கள்.தற்சமயம் டெலிகாம் துறை கடும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. பெரிய அளவில் இயங்கிவந்த தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்றவையே கடும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைபெரிய அளவில் கடனாளி களாக மாறியுள்ளன. இவற்றின் கடன் சுமை என்பது சுமார் எட்டு லட்சம் கோடி ரூபாய்களாகும். நெருக்கடியின் விளைவாக வோடாபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் ஒன்றாகியுள்ளன. இதர சிறிய தனியார் கம்பெனிகளான ஏர்செல், டாட்டா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம், டெலினார் முதலானவை மூடப்பட்டிருக்கின்றன.மத்திய ஆட்சியாளர்கள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்னும்நிறுவனத்திற்கு அளித்து வரும் சலுகைகள் காரண மாக டெலிகாம் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நெருக்கடி பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐயும் பாதித்துள் ளது. அனைத்து டெலி காம் கம்பெனிகளும் மூடப்பட்டு, ரிலையன்ஸ் ஜியோவின் இலக்கு வெற்றி யடைந்த பின்னர், அது தன் சுயரூபத்தைக் காட்டும்.அழைப்புகள் மற்றும் இணை யவழி தரவுகளுக்கான கட்ட ணங்களை செங்குத்தாக உயர்த்திடும்.

டெலிகாம் அதிகாரி பழிவாங்கல்

ரிலையன்ஸ் ஜியோ விற்கு பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே ஆதரவாக இருந்து வரு கிறார். ஜியோவிற்கு எதிராகக் குரல் கொடுத்து இந்திய டெலிகாம் முறைப் படுத்தல் குழுமத்திற்குக் கடிதம் எழுதிய டெலிகாம் துறையின் அதிகாரியான ஜே.எஸ்.தீபக் உடனடியாக அதிலிருந்து தூக்கி எறி யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்கள் கதி என்னாகும் என்பதற்கு இதுஒரு தெளிவான சமிக்ஞை யாகும்.பிஎஸ்என்எல் ஊழி யர்களும் அதிகாரிகளும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவேஇருமுறை வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டனர். மத்திய டெலிகாம் அமைச்சர் உறுதிமொழிகளை அளித்த தைத்தொடர்ந்து அப்போது வேலைநிறுத்தங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. எனினும் தற்போது டெலிகாம் துறையிலிருந்து முக்கிய கோரிக்கைகளை நிராகரித்துக் கடிதம் வந்ததை அடுத்து, பிஎஸ் என்எல் ஊழியர்களும் அதிகாரிகளும் வேலை நிறுத்த த்தில் இறங்கவுள்ளனர். (ந.நி.)

BSNL Employees Union Nagercoil